கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வருகிறார் வாணி போஜன்.
நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், ஹீரோயினாக நடித்த ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.
அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரி பெற்றதோடு, ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து, வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது இவரது கைவசம்... 'பாயும் ஒளி நீ எனக்கு', பகைவனுக்கு அருள்வாய், சியான் 60 உள்பட சுமார் 6 படங்கள் இவரது கைவசம் உள்ளது.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது.. செம்ம ஸ்டைலிஷ் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.
பிளாக் கலர் டி- ஷர்ட், மேலே ஒயிட் நிற ஷர்ட் அணிந்து செம்ம ஹாய்யாக பட்டன் போடாமல், கோட் சூட் மற்றும் ஸ்கர்ட் அணிந்தபடி இந்த புகைப்படத்தில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.