'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுடன் சமந்தா..! வைரலாகும் புகைப்படம்..!

First Published | Aug 23, 2021, 11:07 AM IST

நயன்தாரா - சமந்தா இருவரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஷூட்டிங் தற்போது புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், சமந்தா - நயன்தாரா இருவரும் கேக் அருகே நிற்பது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இவர்களுடன் விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் ஆகியோரும் உள்ளனர்.
 

நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன், சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதற்காக படக்குழுவினர் புதுவை சென்றுள்ளனர்.

Tap to resize

சுமார் ஒருவார காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை காண அவரது ரசிகர்கள், நயன்தாரா தங்கி இருக்கும் தயார் சொகுசு ஓட்டல் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

படப்பிடிப்புக்காக வெளியே வந்த நயன்தாரா, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி காரில் ஏறி சென்றார். மேலும் காரின் உள்ளே இருந்து கொண்டு, ரசிகர்களுக்கு வணக்கம் கூறினார். இதுகுறித்த வீடியோ ஒன்று ஓரிரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

தாற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில், சமந்தா மெல்போர்னில் நடந்த படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது வாங்கியுள்ளதற்காக இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் கேக் வெட்டி அவருக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தாற்போது வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!