உலக நாயகன் கமல்ஹாசனின் உடன்பிறந்த சகோதரரான சாருஹாசனின் மகள் தான், 80 மற்றும் 90 களில் தமிழில், விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சுஹாசினி.
நடிகை என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என திரையுலகில் தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
நடிகை சுஹாசினி, தன்னுடைய சித்தப்பாவை தொடர்ந்து... 1980 ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்துக்கே சிறந்த அறிமுக நடிகைக்காக தமிழ் நாடு ஸ்டேட் பிலிம் அவார்டுக்கு நாமினேட் செய்யப்பட்டார். மேலும், முதல் படத்திற்காக பிலிம் ஃபேர் விருதையும் பெற்றார்.
இந்த படத்தை தொடர்ந்து, குடும்பம் ஒரு கதம்பம், தெய்வ திருமணங்கள், பாலைவன சோலை, போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழி படங்களை அடுத்து ஹிந்தி மற்றும் இங்கிலீஷ் போன்ற மொழிகளிலும் சுஹாசினி நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சுஹாசினி இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் பணியாற்றும் போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறவே, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு நந்தன் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். திருமணமத்திற்கு பிறகும் சுஹாசினி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தரமான குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சுஹாசினி திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் ஒன்று, சிந்து பைரவி 1985-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றார்.
மேலும் இதுவரை சுஹாசினி 4 பிலிம்பேர் விருதுகள், 2 கேரள மாநில விருதுகள், 2 தமிழ்நாடு மாநில விருதுகள் மற்றும் 2 நந்தி விருதுகளை வென்றுள்ளார்.
தற்போது இவருக்கு 61 வயது ஆகும் நிலையில், 25 வயது இளம் ஹீரோயினை போல்... பட்டு சேலையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில இதோ...