Sneha Diwali Celebration: வாவ் சினேகாவின் மகளா இது? அப்படியே அழகில் அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க!

Published : Nov 05, 2021, 06:27 PM ISTUpdated : Nov 05, 2021, 06:28 PM IST

நடிகை சினேகா (Sneha) தன்னுடைய குடும்பத்துடன் கோலாகலமாக தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
18
Sneha Diwali Celebration: வாவ் சினேகாவின் மகளா இது? அப்படியே அழகில் அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த, சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

 

 

28

சூர்யா - ஜோதிகாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி சினேகா - பிரசன்னா தான்.

 

38

 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது.

 

48

2015ம் ஆண்டு இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகாவிற்கு வேலைக்காரன் படம் மூலம் ரசிகர்கள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர்

 

58

இந்த படத்தில் நடித்து முடித்ததும், சில பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது. ஆனால் திடீர் என சினேகா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். தனுஷுடன் 'பட்டாஸ்' படத்தை கர்ப்பமாக இருக்கும் போதே நடித்து முடித்த சினேகா பின்னர்  குழந்தையும் பெற்றெடுத்தார்.

 

68

மகளுக்கு தற்போது இரண்டு வயது ஆகிவிட்டதால், மீண்டும் பட வாய்ப்பை தேடி வரும் சினேகா, அவ்வப்போது கணவருடன் சேர்ந்து விளம்பர படங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

78

இந்நிலையில் தன்னுடைய கணவர், மகன், மகள் என அனைவருடனும் மிகவும் சந்தோஷமாக இந்த தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சினேகா.

 

 

88

குறிப்பாக சினேகாவின் மகள், அப்படியே தன்னுடைய அம்மாவை போல் அழகில்... குட்டி தேவதை போல் உள்ளனர். சினேகாவும் குழந்தை பிறந்த பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட் அழகியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

click me!

Recommended Stories