80-களில் கமல், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சீதா. இவர் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான, 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவருடைய முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து, இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர்.
சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய காதல் மற்றும் விவகாரம் குறித்து பேட்டி ஒன்று கூறும்போது, சீதா தான் தன்னிடம் முதலில் காதலை கூறியதாகவும்... அவரின் அதிக எதிர்பார்ப்பு காரணமாக தான் இருவருக்கும் இடையே விவாகரத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னுடைய கணவன் தனக்கு மட்டும்தான் என எதிர்பார்த்தது என்ன தவறு இருக்கிறது? நான் சராசரி ஒரு மனைவியாக அதை எதிர்பார்த்தது தவறில்லை என நினைக்கிறேன் என கூறியுள்ளது, சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. சீதா - பார்த்திபன் விவாகரத்து பெற்று, 20 வருடங்கள் ஆன பின்னர், தற்போது மீண்டும் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சீதா - பார்த்திபன் விவாகரத்து பெற்று பிரிந்தாலும், குழந்தைகள் திருமணம், மற்றும் குடும்ப விசேஷங்கள் என்றால், ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில், மகன் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார்.