Shubha Poonja Divorce : பிரபல நடிகை ஒருவர் திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்துள்ளனர்.
நடிகை சுபா பூஞ்சா மற்றும் அவரது கணவர் சுமந்த் பில்லவா இடையேயான திருமண வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரியுள்ளனர். இந்த விவாகரத்து செய்தி திடீரென வெளிவந்தாலும், இதற்கான க்ளூ சுபாவின் தாயார் இறந்தபோதே வெளியுலகுக்கு தெரிந்துவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி சுபா பூஞ்சாவின் தாயார் இறந்தபோது, அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால், அந்தப் பதிவில் மறைந்திருந்த வலி, தாயின் பிரிவை மட்டும் சொல்லவில்லை, தனது திருமண வாழ்க்கையின் சிக்கலையும் அது காட்டியது என்பது இப்போது உண்மையாகி வருகிறது.
25
ஹிண்ட் கொடுத்த சுபா
அன்று சுபா, 'அம்மா, என்னை ஏன் விட்டுட்டுப் போன? நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல. 24 மணி நேரமும் உன்கூடவே இருந்தேன். இப்போ நான் என்ன பண்ணுவேன்? எங்கே போவேன்? யாருக்காக நான் வீட்டுக்குத் திரும்பி வரணும்?' என்று கதறியிருந்தார். கணவர் வீட்டில் இருந்தும், 'யாருக்காக வாழ வேண்டும்?' என்று சுபா கேட்டது கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு மனைவிக்கு கணவரே ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில், சுபாவுக்கு தன் வாழ்க்கையில் அம்மாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற வெறுமை உணர்வு ஏற்பட்டது. இந்த ஒரு வாக்கியமே அவர்களின் குடும்பத்தில் எல்லாம் சரியில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
35
அம்மாவின் மறைவால் தனிமையில் தத்தளித்த சுபா
பொதுவாக, இதுபோன்ற இக்கட்டான சமயங்களில் கணவர் பெரிய ஆதரவாக இருப்பார். ஆனால் சுபாவின் நீண்ட உணர்ச்சிகரமான பதிவில், கணவர் சுமந்த் பற்றியோ அல்லது அவரிடமிருந்து தனக்குக் கிடைத்த ஆறுதல் பற்றியோ ஒரு சிறிய குறிப்புகூட இல்லை. 'என் முழு வாழ்க்கையே நீதான்' என்று தாயைப் பற்றிச் சொல்லும்போது, கணவர் சுமந்த் அந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை என்ற க்ளூ அன்றே அவரது ரசிகர்களுக்குக் கிடைத்தது. கணவர் சுமந்த் தனது பிசினஸில் மூழ்கியிருக்க, சுபா மனதளவில் தனிமையாக உணர்ந்தார்.
திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதது கூட, இவர்களுக்குள் இருந்த இடைவெளிக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி முன்பு கேட்கப்பட்ட கேள்விக்கு சுபா, 'தெருவில் இருக்கும் பிராணிகள்தான் எனக்குக் குழந்தைகள். சொந்தக் குழந்தைகள் இருந்தாலும் நான் இவற்றை இவ்வளவுதான் நேசிப்பேன்' என்று பதிலளித்திருந்தார். குழந்தை விஷயத்தில் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு இருந்ததா அல்லது பொருத்தம் இல்லையா என்பதுதான் தற்போதைய விவாதப் பொருள்.
தாயின் மரணத்திற்குப் பிறகு சுமார் 4 மாதங்கள் தீவிர மன அழுத்தத்தில் இருந்த சுபா, இப்போது அந்த வலியிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறார். உடல் எடையைக் குறைத்து ஃபிட்னஸில் கவனம் செலுத்தும் அவர், 'பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்' போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மீண்டும் ஆக்டிவாகி வருகிறார். 'நான் ஸ்டராங்காக கம்பேக் கொடுக்க வேண்டும்' என்ற அவரது முடிவுக்குப் பின்னால், விவாகரத்துக்குப் பிறகான தனி வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம் வெளிப்படுகிறது.
55
யார் இந்த சுபா பூஞ்சா?
சுபா பூஞ்சா, கன்னட பிக் பாஸ் சீசன் 8-ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். இவர் 'ஜாக்பாட்', 'சண்ட', 'ஸ்லம் பாலா', 'அஞ்சதிரு', 'தாகத்', 'நாரி அட்டா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சில சீரியல்களிலும் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளார். சுபா பூஞ்சா மற்றும் சுமந்த் பில்லவா திருமணம், கடந்த 2022 ஜனவரி மாதம் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, கணவர் சுமந்துடன் சேர்ந்து சில ரியாலிட்டி ஷோக்களிலும் சுபா பூஞ்சா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.