சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமானவர் சீரியல் நடிகை ஷிவானி. இதை தொடந்து, பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் இவருடைய சீரியல் பயணத்தில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவருடைய காதாப்பாத்திரமும் காதல் காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது 'இரட்டை ரோஜா' என்கிற சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார்.