கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த “வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சமீரா ரெட்டி.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது.
இதையடுத்து 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீராவுக்கு, இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அப்போது கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் போல்டாக நீருக்கு அடியில் கவர்ச்சி போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்தார்.
போட்டோ ஷூட்டில் மட்டும் மிகவும் போல்ட் அல்ல நிஜத்திலும் சமீரா ரெட்டி போல்டான பெண்மணி தான். சமீபத்தில் கூட இதனை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய வெள்ளை முடிகளை காரைக்காததற்கு அவரது தந்தைக்கு பதில் கொடுப்பதுபோல் இவர் போட்ட பதிவு பாராட்டுகளை குவித்தது.
இந்நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் பீச்சுக்கு சென்று, வீட் என்டை என்ஜாய் செய்துள்ளார். கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிகினி உடையுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.