கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது, கொழு கொழு வென்று இருந்தார். ஆனால் 'மகாநடி' படத்திற்கு பின் தன்னுடைய உடல் எடையை குறைத்து பாலிவுட் திரையுலகில் நடிக்க சென்றார். ஆனால் ஒரு சில காரணங்களால் பாலிவுட் படத்தில் நடிக்க முடியாமல் போகவே, மீண்டும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையின் நாயகியாகவும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.