பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.
அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து, தான் அப்பாவாக உள்ள நல்ல செய்தியை வெளியில் கூறலாம் என காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
மகளின் ஆசையாக மேக்னா ராஜ்ஜினின் தந்தை, சிரஞ்சீவி சர்ஜாவின் ஆளுயர கட்அவுட் வைத்து சீரும் சிறப்புமாக வளைகாப்பை நடத்தி முடித்தார்.
இந்நிலையில் மேக்னாவிற்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகிய குழந்தை பிறந்தது. இவருக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் திடீர் என மேக்னா ராஜ் மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் தீயாக சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கியது. மேக்னா ராஜ் பிக்பாஸ் கன்னட நிகழ்ச்சியில் சீசன் 4 -யில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிரத்தம் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக யு- டியூப் சேனல் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
இதற்க்கு பிரத்தம் மிகவும் காட்டமாக பதிலளித்துள்ளார். மேக்னா ராஜும் பிக்பாஸ் வின்னர் பிரத்தமின் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்கள் என்று கூறப்படும் நிலையில் இந்த வதந்தி பரவியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அவர், இதுவும் சாதாரண வதந்தி என்று என்னால் கடந்து போகமுடியவில்லை, உண்மை தன்மையை அறியாமல் செய்தி வெளியிட்டதற்காக நிச்சயம் அந்த ஊடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக காட்டமாக கூறியுள்ளார்.