கர்ப்பமாக இருப்பதாக கூறிய சமந்தா..! எப்போதில் இருந்து தெரியுமா?

First Published | Aug 29, 2020, 7:19 PM IST

சமந்தாவின் ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என எழுப்பிய கேள்விக்கு, கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார், சமந்தா.
 

நடிகை சமந்தா, இந்த கொரோனா லாக் டவுன் முடிந்த கையோடு... இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்தார்.
Tap to resize

அப்போது அவருடைய ரசிகர் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த சமந்தா, "நான் 2017 முதல் கர்ப்பமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன், இந்த குழந்தை உண்மையில் வெளியே வர விரும்பவில்லை என்று நினைப்பதாக வேடிக்கையாக பதிலளித்துள்ளார்".
அதாவது தனக்கு திருமணம் ஆன ஆண்டை வைத்து தான் சமந்தா இப்படி கூறியுள்ளார். சமந்தாவுக்கும், நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு திருமணம் ஆனதில் இருந்து, இவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து சமந்தா எப்போது குழந்தை பெற்று கொள்வார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் சமந்தாவோ, அடுத்ததாக தான் நடிக்க உள்ள தமிழ் படத்தில் தான் அதிக ஆர்வமாக இருக்கிறார். அதே போல் இந்த லாக் டவுன் நேரத்தில், வீட்டு தோட்டம் வைத்து பராமரித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் அதிகம் ஆர்வம் காட்டும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!