சமந்தாவின் திருமண விழா கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. பைரவி கோவிலில் சமந்தா, ராஜ் நிடிமோரு திருமணம் நடந்தது. இதில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. சமந்தா, ராஜ் விரைவில் தங்கள் திருமணத்தை ரசிகர்களுக்கு அறிவிப்பார்கள் என தெரிகிறது. ராஜ் நிடிமோரு இயக்கிய 'தி ஃபேமிலி மேன் 2' தொடரில் சமந்தா நடித்தார். அங்குதான் இருவரும் சந்தித்தனர்.