sakshi agarwal hot :சொகுசு பைக்கில் தினுசுதினுசா போஸ் கொடுத்து! திகட்ட திகட்ட கிளாமரில் கிறங்கடிக்கும் சாக்‌ஷி

First Published Feb 10, 2022, 1:16 PM IST

டைட்டான கவர்ச்சி உடையில், மொத்த அழகையும் எடுப்பாக காட்டி சொகுசு பைக்கில் அமர்ந்தபடி நடிகை சாக்‌ஷி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால் (sakshi agarwal). இப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாக்‌ஷி.

நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவித கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் என துணிச்சலான நடிகையாக வலம் வருகிறார் சாக்‌ஷி (sakshi).

அதன்பலனாக இவருக்கு ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் பிரபலமாகாமல் இருந்த சாக்‌ஷிக்கு புகழ் வெளிச்சம் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சாக்‌ஷி, அந்நிகழ்ச்சிக்கு பின் சோஷியல் மீடியாவில் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார்.

தற்போது கோலிவுட்டில் இவர் கைவசம், பஹீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புறவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் உள்ளன. 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது டைட்டான கவர்ச்சி உடையில், மொத்த அழகையும் எடுப்பாக காட்டி சொகுசு பைக்கில் அமர்ந்தபடி நடிகை சாக்‌ஷி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!