வீடு தேடி வந்த சூப்பர் வாய்ப்பு... உடனே ஓ.கே.சொன்ன சாய்பல்லவி... அப்படி என்ன படம் தெரியுமா?

First Published | Oct 30, 2020, 6:29 PM IST

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”.
பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த ஜூன் 18ம் தேதி காலமானார்.
Tap to resize

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார்.ஆனால் இதுவரை இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து படக்குழு படப்பிடிப்பு தொடங்கு வேலையில் இறங்கிவிட்டது. படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.
கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.​
இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிக்க வேண்டுமென கேட்டதுமே சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Latest Videos

click me!