மலையாளத்தில் பகத் பாசிலுடன் நடித்த ஆயாள் ஞான் அல்ல என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மிருதுளா முரளி.
தமிழிலும் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ., மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள மிருதுளா முரளி திடீர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிருதுளா முரளியும், உதவி இயக்குநரான நிதின் விஜய் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணம் ஏப்ரல் மாதம் நடக்க இருந்தது. கொரோனா வைரல் பரவல் அதிகமானதை அடுத்து அது தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் கொச்சியில் நேற்று எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் சரண்யா மோகன், பாவனா, ரம்யா நம்பீசன் ஆகியோரும், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்து கூறினர்.