ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, இந்து, வீரா, எங்கிருந்தோ வந்தான், அசுரன், ராசையா, தமிழ் செல்வன், வள்ளல், கடவுள், அரசியல், என் ஆசை ராசாவே என்று பல படங்களில் நடித்துள்ளார்.