துணை முதல்வர் உதயநிதியுடன் எடுத்த செல்பியால் வெடித்த சர்ச்சை.. பதறிப்போய் விளக்கமளித்த நடிகை ரித்திகா

Published : Nov 29, 2025, 12:34 PM IST

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 27-ந் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை ரித்திகா பதிவிட்டது சர்ச்சையானது.

PREV
12
Rethika Selfie With Udhayanidhi Stalin

துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த நவம்பர் 27-ந் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் நடிகை ரித்திகாவின் வாழ்த்து மிகவும் வைரல் ஆனது. அவர் உதயநிதி ஸ்டாலின் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ஹாப்பி பர்த்டே என பதிவிட்டு இருந்தார். அதற்கு ஏராளமானோர் வில்லங்கமாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

இந்த போட்டோவுக்கு ஏன் இவ்வளவு லைக் வந்தது என பதறிப்போன நடிகை ரித்திகா, அதற்கு வந்த கமெண்ட்டுகளை படித்து ஷாக் ஆகிப்போனார். இதையடுத்து அந்த போட்டோவின் பின்னணி என்ன என்பதன் விளக்கத்தை அவர் அளித்துள்ளார். அதன்படி அந்த புகைப்படம் சரவணன் இருக்க பயமேன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்தது என்றும், அதனால் அதனை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

22
விளக்கமளித்த நடிகை ரித்திகா

அதேபோல் விஜய்யுடன் கோட் படத்தில் நடிக்கவும் தனக்கு ஒரு சான்ஸ் வந்ததாக கூறி உள்ள ரித்திகா, அது ரொம்ப குட்டி ரோல் என்பதால் அதை நிராகரித்துவிட்டதாக கூறி உள்ளார். ஆனால் அதில் நடித்து விஜய் சார் உடனும் ஒரு செல்பி எடுத்திருக்கலாம் என தோன்றுவதாக ரித்திகா தெரிவித்துள்ளார். ஒன்னு தெரிஞ்சுக்கோங்க, இவங்கெல்லாம் என்னுடைய சக நடிகர்கள். அவர்களோடு நான் போட்டோ எடுத்திருந்தால் நிச்சயம் அவர்களின் பிறந்தநாளுக்கு பதிவிடுவேன்.

உதயநிதி சார் உடன் நான் போட்ட போட்டோவுக்கு அவ்ளோ கமெண்ட் போட்டிருக்கீங்க. நிறைய பேர் அரசியல் பார்வையோடும் பதிவிட்டிருக்கிறீர்கள். அதற்கு நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் இதை என்னுடைய கமெண்ட் பாக்ஸில் காட்டி எந்தவித பயனும் இல்லை. இதையெல்லாம் உங்களுடைய ஓட்டிங்கில் காட்டுங்கள். யார் உங்களுக்கு பிடிக்குமோ... அவங்களுக்கு வாக்களியுங்கள். அதைவிட்டுட்டு என்னுடைய போட்டோவுக்கு கமெண்ட் செய்வதால் எந்த பயணும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார் ரித்திகா.

Read more Photos on
click me!

Recommended Stories