மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான், ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
26
அப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அவருடை நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இதையடுத்து பிக்பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ரெபா.
36
இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இவர் கைவசம் விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படம் மட்டுமே உள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
46
நடிகை ரெபா மோனிகா ஜான் கடந்த மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவர் தனது நீண்ட நாள் காதலனான ஜோமன் ஜோசப்பை திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
56
திரையுலகில் படிப்படியாக வளர்ந்து வரும் நடிகை ரெபா, திடீரென திருமணம் செய்துகொண்டது அவரது ரசிகர்களுக்கு ஷாக் ஆக அமைந்தது. இந்நிலையில், நடிகை ரெபா மோனிகா ஜான் தற்போது தனது கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்.
66
இத்தம்பதி ஹனிமூன் கொண்டாட்டத்துக்காக மாலத்தீவு சென்றுள்ளது. அங்கு காதல் கணவருடன் ஜாலியாக பொழுதை கழித்து வரும் அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.