'புஷ்பா' திரைப்படம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்த போது... அதில் கருப்பு நிற சேலையில் ராஷ்மிகா (Rashmika) கலந்து கொண்டு கலக்கிய கியூட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
211
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.
311
இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
411
மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
511
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் இந்த மாதம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.
611
இரண்டு பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.
711
இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பரபரப்பாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
811
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்கள், போஸ்டர்கள் என அனைத்துக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
911
குறிப்பாக கடந்த இரண்டு இரண்டு நாட்களுக்கு முன்னாள் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி, 24 மணிநேரத்தில் சுமார் 14 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு மாஸ் காட்டியது.
1011
தற்போது படம் ரிலீஸ் நெருங்கி வருவதால்... படக்குழு தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்... நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருப்பு நிற சேலையில் வந்திருந்த ராஷ்மிகா குஷி ஜோதிகாவை நினைவு படுத்தும் வங்கியில் தன்னுடைய குட்டி இடுப்பை வளைத்து வளைத்து காட்டியுள்ளார்.
1111
அதிலும் அவர் முகம் மட்டும் மின்னாமல் உடலே மின்னும் அளவிற்கு கவர்ச்சியை கூட்டி ரசிகர்களை சூடேற்றிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.