ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாளில் கலை கட்டிய நைட் பார்ட்டி! பிரபலங்கள் ஒன்று திரண்டு செம்ம என்ஜாய்மென்ட்!

First Published Sep 16, 2021, 5:03 PM IST

நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தன்னுடைய 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, நேற்று இரவு பிரபலங்கள் பலருக்கும் நைட் பார்ட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வயசானாலும் இன்னும் அழகும், தன்னுடைய ஹீரோயின் ஸ்டைலிலும் கொஞ்சம் கூட குறையாமல் திரையுலகை அலங்கரித்து வரும், ரம்யா கிருஷ்ணன் இன்று தன்னுடைய 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக நேற்று நடந்த நைட் பார்ட்டியில் த்ரிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, குஷ்பு, ராதிகா, மதுபாலா என இவரது நெருங்கிய நட்பு வட்டாரத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

உண்மையில் ரம்யா கிருஷ்ணனை பார்த்தல் 50 வயசுன்னு யாராவது சொல்ல முடியுமா? இப்போதும் யங் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஜொலிக்கிறார் பாருங்க.

தன்னுடைய ஒட்டு மொத்த தோழிகளுடன் பிறந்தநாள் பார்ட்டியை கலை கட்டவைத்த ரம்யா கிருஷ்ணன். என்ன ஒரு ஆரவார கொண்டாட்டம்.

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன்பாக, தன்னுடைய குடும்பத்துடனும் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

முதலில் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பின்பு தான் தோழிகளுடன் பிறந்தநாள் பார்ட்டியில் களம் இறங்கியுள்ளார்.

தற்போது இவரது பர்த்டே பார்ட்டி புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

click me!