போதைப்பொருள் வாங்க போன இடத்தில் கையும் களவுமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகை...!

First Published | Oct 26, 2020, 1:26 PM IST

தற்போது இந்த வழக்கில் சிக்கிப்போவது யார் என ஓட்டுமொத்த திரையுலகமே பீதியுடன் உற்றுநோக்கி கொண்டிருந்த சமயத்தில் வாண்டாடக போய் சிக்கியுள்ளார் பிரபல சீரியல் நடிகை ஒருவர். 
 

இந்தி மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலி ரியா சக்ரபார்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய 4 பேரிடமும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
Tap to resize

மேலும் கன்னட திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரபல இளம் நடிகைகளான ராகிணி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கில் சிக்கிப்போவது யார் என ஓட்டுமொத்த திரையுலகமே பீதியுடன் உற்றுநோக்கி கொண்டிருந்த சமயத்தில் வாண்டாடக போய் சிக்கியுள்ளார் பிரபல சீரியல் நடிகை ஒருவர்.
இந்தியில் மிகவும் பிரபலமான சீரியலில் நடித்தவர் ப்ரீத்தா சவுகான். இவர் போதைப்பொருள் வாங்கும் போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காத்திருந்து கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு உடையவர்களை பிடிப்பதற்காக போலீசார் விரித்த வலையில் சீரியல் நடிகை ப்ரீத்தா சவுகான் சிக்கியது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதுக்கு பின் நீதிமன்றத்தில் ப்ரீத்திகா சவுகான் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!