மலையாள நடிகையான பூர்ணா, பரத் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தொடர்ந்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, அடங்கமறு, காப்பான், தலைவி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.