ஜீவா நடிப்பில் வெளிவந்த "முகமூடி" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். தற்போது இந்தியில் பூஜா ஹெக்டே நடித்த "ஹவுஸ்ஃபுல் 4" படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மீடு விவகாரத்தில் ஹீரோயின்களுக்கு ஆதரவாக கொடி பிடித்த பூஜா ஹெக்டே, நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கு சம்பளம் தர தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை என ஓபன் டாக் விட்டு அதிரடி கிளப்பினார். தற்போது தெலுங்கில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் உடன் "அலா வைகுண்டபுரம்லோ" என்ற படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி போட்டோ ஷூட்களில் பங்கேற்கும் பூஜா ஹெக்டே, தனது சோசியல் மீடியா பக்கங்களில் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் பூஜா ஹெக்டே எடுத்த மார்டன் போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.