ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் பேயாகவும் நடித்து அசத்தி இருந்தார் நிக்கி. இதையடுத்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, ஹர ஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2, யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
சினிமாவில் பிசியான நடிகையாக வளர்ந்து வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ஆதியை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து கடந்த மே 18-ந் தேதி இத்தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் ஜீவா, சசிகுமார், நாசர், அருண்விஜய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணு, இயக்குனர் ஹரி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், திருமணமான 10 நாட்களில் நடிகை நிக்கி கல்ராணி எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதன்படி இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள ‘வெல்லும் திறமை’ என்கிற ரியாலிட்டி ஷோவில் நடுவராக கலந்துகொள்ள உள்ளாராம். இதன்மூலம் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Madhumitha : குழந்தை பிறந்த குஷியில் பிக்பாஸ் மதுமிதா... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்