Madhumitha : குழந்தை பிறந்த குஷியில் பிக்பாஸ் மதுமிதா... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

Published : May 29, 2022, 08:48 AM IST

Madhumitha : பிக்பாஸ் பிரபலம் மதுமிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிந்த ரசிகர்கள், சமூக வலைதளம் வாயிலாக நடிகை மதுமிதாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

PREV
14
Madhumitha : குழந்தை பிறந்த குஷியில் பிக்பாஸ் மதுமிதா... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மதுமிதா. இப்படத்தில் ஜாங்கிரி என்கிற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.

24

முதல் படத்திலேயே பாப்புவர் ஆன இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அடுத்ததாக இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, காஞ்சனா 2, ஸ்கெட்ச், விஸ்வாசம், டிக்கிலோனா என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தினார்.

34

இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகை ஷெரின் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்திய இவர், அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். 

44

நடிகை மதுமிதாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை மதுமிதாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தின. இந்நிலையில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள், சமூக வலைதளம் வாயிலாக நடிகை மதுமிதாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Meera Jasmine : இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மீரா ஜாஸ்மின்

click me!

Recommended Stories