கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக, அணைத்து திரையுலக பணிகளும் முற்றிலும் முடங்கி உள்ளதால், நடிகர் - நடிகைகள் முடிந்த வரை வீட்டில் இருந்தபடியே தங்களுடைய அணைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில மறக்காமல் தங்களுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிட மட்டும் மட்டும் மறப்பதில்லை.
இந்நிலையில், பிரபல நடிகர் ஆதியின் தந்தை பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், இதில் அவருடைய நெருங்கிய குடும்பத்தினருடன் நிக்கி கல்ராணியும் கலந்து கொண்டுள்ளார்.
இதனால் ஆதியும் - நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக அரசால் புரசலாக சில கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.
நடிகர் ஆதி, ’ஈரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ஆதி, ’அய்யனார்’ ’ஆடுபுலி ஆட்டம்’ ’அரவான்’ ’யாகாவாராயினும் நாகாக்க’ ’மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை நிக்கி கல்யாணி ஜிவி பிரகாஷ் நடித்த ’டார்லிங்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன் பின் ’வேலை வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’கடவுள் இருக்கான் குமாரு’ ’மொட்டசிவா கெட்டசிவா’ ’நெருப்புடா’ ’ஹர ஹர மகாதேவகி’ ’கலகலப்பு 2’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து யாகாவாராயினும் நாகாக்க, மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்களில் நடிக்கும் போதுதான் இருவருக்குள்ளும் காதல் தீ பற்றியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி வெளியாகியுள்ள தகவலை வழக்கம் போல் இருவரும் மறுப்பர்களா? அல்லது காதல் உண்மை தான் விரைவில் திருமணம் என அதிர்ச்சி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.