நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதிக்கு சென்றனர். அங்குள்ள ஏழுமலையான் கோவிலில் இருவரும் ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு போட்டோஷூட்டும் நடத்தினர். அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் அது தெரியாமல நடந்த ஒரு விஷயம் என்றும், வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.