Meena: தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த மீனா! இது தான் எனக்கு ரொம்ப முக்கியம்!

First Published | Mar 23, 2023, 9:21 AM IST

பிரபல நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து, அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி வரும் நிலையில், முதல் முறையாக தன்னுடைய தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து, பேட்டி ஒன்றில் வாய் திறந்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஐந்து வயதிலேயே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக மட்டுமின்றி யாரும் எதிர்பாராத நேரம் ஹீரோயினாகவும் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார்.

நடிகர் ராஜ் கிரண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக மாறி,  தமிழ் சினிமாவில் அனைவராலும் தேடப்படும் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். குறிப்பாக ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக மட்டுமின்றி, எஜமான், முத்து, வீரா, போன்று அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் வேற லெவல் வெற்றி பெற்றது. அதை போல் கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், அர்ஜூன், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

அட நம்ம அஞ்சலிக்கு கல்யாண கலை வந்துடுச்சி! பட்டு புடவையில்... கையில் மருதாணி வைத்து மனதை மயக்கும் நடிகை!

Tap to resize

திரையுலகில்  தன்னுடைய மார்க்கெட் குறைய துவங்கிய பின்னர், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.  எனினும் இவரின் நடிப்பு சுதந்திரத்திற்கு கணவர் எவ்வித தடையும் போடாததால், தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோக்களின் அக்கா, அண்ணி, போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்கள் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மீனாவிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் இவரை போலவே இவரின் மகள் நைனிகாவும், தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது தன்னுடைய படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் ரோபோ ஷங்கர் துரும்பா இளைத்ததன் காரணம் என்ன? மனைவி கூறிய விளக்கம்..!

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் புறாக்களின் எச்சத்தால் ஏற்படும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்த போதிலும்...  கடந்தாண்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவரின் மறைவு நடிகை மீனாவை மிகப்பெரிய அளவில் பாதித்தது. எனினும் மெல்ல மெல்ல தன்னுடைய கணவரின் நினைவில்  இருந்து அவரை மீட்டு வெளியே கொண்டு வர அவருடைய தோழிகள் பல்வேறு முயற்சிகளை தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர்.
 

அவ்வப்போது மீனாவை சந்தித்து அவரை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அடிக்கடி சில வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் தனுஷை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, ஒரு தகவல் உலா வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.  இப்படி பரவும் வதந்திகளுக்கு முதல்முறையாக நடிகை மீனா தன்னுடைய பேட்டி ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி.. நடு ரோட்டில் நிர்வாணமாக திரிந்த நடிகையால் பரபரப்பு..!
 

இந்த பேட்டியில் நடிகை மீனா கூறியுள்ளதாவது...  "என்னுடைய கணவர் இல்லை என்பதையே இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குள் எப்படி இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகிறது என்பது என்னால் தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவேன். அதேபோல் எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே தன் எனக்கு மிகவும் முக்கியம், என கூறியுள்ளார்.

Latest Videos

click me!