அடடே நம்ம மாதவனா இது?... காண்போர் கண்களை வியக்க வைக்கும் விதவிதமான கெட்டப் போட்டோஸ்...!

First Published | Dec 23, 2020, 7:59 PM IST

மாதவன் நடிப்பில் உருவாகவிருந்த மற்றும் கைவிடப்பட்ட படங்களில் அவருடைய கெட்டப்பு போட்டோக்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார். 
 

தமிழில் அலைபாயுதே, மின்னலே படம் மூலமாக இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்த மாதவன் இந்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
கடைசியாக தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதேபோல் நிசப்தம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தும் அசத்தியிருந்தார். அடுத்து மாறா படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
Tap to resize

சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய மாதவன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கெட்டப்புகளில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.
மாதவன் நடிப்பில் உருவாகவிருந்த மற்றும் கைவிடப்பட்ட படங்களில் அவருடைய கெட்டப்பு போட்டோக்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக சத்ரபதி சிவாஜி தோற்றத்தில் இருக்கும் மாதவன் போட்டோவிற்கு ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல் முகத்தில் தழும்புடன் பார்க்கவே செம்ம டேரராக இருக்கும் மாதவனின் போட்டோவும் ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது.
மாதவனின் மற்றொரு புகைப்படம் உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி சீரிஸான கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்து இருக்கும் ஜான் ஸ்நோவைப்போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
கோட் அணிந்திருக்கும் புகைப்படம், HBO சீரிஸில் நடித்த கிட் ஹாரிங்டன் போன்று இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
சாக்லெட் பாயாக வலம் வந்த மாதவனா இது? என அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது இந்த போட்டோ.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் மேடியின் இந்த போட்டோ மீண்டும் ரசிகைகளிடம் பிரபலமாகி வருகிறது.

Latest Videos

click me!