ஒரேயடியாய் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய மாளவிகா மோகனன்... “வுமன் இன் பிளாக்” லுக்கில் அதிரிபுதிரி போஸ்!

First Published | Dec 23, 2020, 7:02 PM IST

 ஹாலிவுட் ஹீரோயின்களையே அசரடிக்கும் அளவிற்கு மாளவிகா மோகன தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது. 

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.
Tap to resize

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தும் முடித்துவிட்டார். அதில் என்ன கதாபாத்திரம், எப்படி நடித்திருக்கிறார் என்று தெரிய வரும் முன்னே அடித்தது அடுத்த ஜாக்பாட்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள #D43 படத்தில் மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்க உள்ளது கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது.
அது தவிர மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்கவும் மாளவிகா மோகன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் அந்த படத்தில் 5 கோடிக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் என்பது போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில் ஹாலிவுட் ஹீரோயின்களையே அசரடிக்கும் அளவிற்கு மாளவிகா மோகன தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு வெக்கேஷனுக்கு மாளவிகா நியூயார்க் செல்லலாம் என நினைத்தாராம். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக அங்கு போக முடியாமல் போனது. எனவே நியூயார்க்கில் இருப்பது போன்ற உடையாவது அணிந்து கொள்வோம் என்ற வாசகத்துடன் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கறுப்பு கலர் உடையில் செம்ம டக்கராக இருக்கும் மாளவிகாவின் போட்டோ லைக்குகளை அள்ளுகிறது.

Latest Videos

click me!