keerthy suresh latest : லெஹங்காவில் மெல்லிய இடை தெரிய.... மிதமான கவர்ச்சியில் மெர்சலாக்கும் கீர்த்தி சுரேஷ்

First Published | Jan 27, 2022, 9:01 AM IST

குட்லக் சகி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற லெஹங்காவில் தேவதைபோல் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.

அதே போல் இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகே ரசிகர்கள் மனதில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.

Tap to resize

தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும்  'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றால், அது 'மகாநடி' திரைப்படம் தான். இந்த படத்தில் அச்சு அசல், நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார். பின்னர் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அறிமுகமாகும் போது, கொழுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். 

குறிப்பாக தற்போதைய இவரது உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது. அவ்வப்போது தன்னுனடய விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கீர்த்தி.

அந்த வகையில் தற்போது குட்லக் சகி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற லெஹங்காவில் தேவதைபோல் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்லக் சகி திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Latest Videos

click me!