ஒரே ஒரு படத்தின் மூலம் ஓவர்நைட் ஸ்டாராக மாறியவர் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் கயாடு லோஹர். டிராகன் பட வெற்றிக்கு பின்னர் கயாடுவுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் தற்போது அதர்வா முரளி ஜோடியாக இதயம் முரளி திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ளது.
24
கயாடு லோஹர் கைவசம் உள்ள படங்கள்
இதுதவிர பார்கிங் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாக இருந்த எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்திலும் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்தார் கயாடு லோஹர். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருந்தார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தொடங்கும் முன்னர் இப்படத்தை டிராப் செய்தனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் கயாடு லோஹர் பற்றி சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பரவி வந்தன.
34
கயாடு லோஹர் சர்ச்சை
தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்த டாஸ்மாக் ஊழலில் கயாடு லோஹர் பெயர் அடிபட்டது. அந்த ஊழலில் தொடர்புடையவர்கள் நடத்திய பார்ட்டிகளில் கலந்துகொள்ள நடிகை கயாடு லோஹர் ரூ.35 லட்சம் பெற்றதாக செய்திகள் பரவின. சமீபத்திய பேட்டியில் இதை மறுத்த அவர், எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்கு வந்த தன் மீது களங்கம் கற்பிப்பதாக வேதனைப்பட்டார். தூக்கத்தில்கூட இது நினைவுக்கு வருவதாகவும், இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.
தன் கனவுகளை நிறைவேற்றவே தான் உழைப்பதாகவும், இதைவிட நான் என்ன தவறு செய்தேன் எனத் தெரியவில்லை என்றும் கூறினார். சினிமாவில் முன்னேறி வரும் நேரத்தில் வந்த இந்த குற்றச்சாட்டுகள் வேதனையளிப்பதாக குறிப்பிட்டார். தான் சினிமா பின்னணியில் இருந்து வரவில்லை என்பதால், தன்னைப் போன்ற கலைஞர்கள் மீது எளிதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும், ஆனால் அது எல்லை மீறக்கூடாது எனவும் உணர்ச்சிவசப்பட்ட கயாடு அந்த பேட்டியிலேயே கண்கலங்கினார். அவரது இந்த பேட்டி வைரலாகி வருகின்றன.