கல்யாண டிரஸை ஆங்கரில் மாட்டிவிட்டு... காஜல் அகர்வால் கொடுத்த போஸைப் பாருங்க...!

First Published | Oct 30, 2020, 6:47 PM IST

திருமணத்திற்கு இன்னும் சிறிது நேரமே உள்ள நிலையில், மணப்பெண் மேக்கப் உடன் காஜல் அகர்வால் கொடுத்துள்ள அசத்தல் போஸ் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2, ஹேய் சினாமிகா ஆகிய படங்கள் உள்ளன.
தனக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு காஜல் அகவர்வாலே அறிவித்திருந்தார்.
Tap to resize

இன்று மாலை காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் காஜல் அகர்வால் தனது திருமண நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
இதற்கு முன்னதாக மெகந்தி, ஹல்தி ஆகிய நிகழ்ச்சிகளில் பச்சை மற்றும் மஞ்சள் நிற உடையில் அழகு தேவதையாய் ஜொலித்த காஜல் அகர்வாலின் போட்டோக்கள் வைரலானது.
தற்போது காஜல் அகர்வாலின் திருமணத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் திருமண உடையை ஹேங்கரில் மாட்டியபடி, அதன் முன் கைகளை ஒன்றாக கட்டியபடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மணப்பெண் மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்துடன் இருக்கும் காஜல் அகர்வால், புயலுக்கு முன்னே அமைதி என அந்த போட்டோவிற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோவிற்கு நடிகைகள் சமந்தா, தமன்னா உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

Latest Videos

click me!