actress Aparna Vinod : விஜய் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்..வைரலாகும் சூப்பர் கூல் போட்டோஸ்

Published : Oct 31, 2022, 09:05 PM IST

பைரவாவிற்கு பிறகு நடுவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.

PREV
16
actress Aparna Vinod : விஜய் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்..வைரலாகும் சூப்பர் கூல் போட்டோஸ்
aparna vinod

கடந்த 2017 ஆம் ஆண்டு பரதன் என்பவரின் இயக்கத்தில் வெளியாக இருந்தது விஜயின் பைரவா.  இந்த படத்தை வெங்கட்ராம ரெட்டி என்பவர் தயாரித்திருந்தார்.

26
aparna vinod

இதில் கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க, பிரவீன் படத்தொகுப்பு செய்திருந்தார். விஜயின் அறுபதாவது படமான பைரவா படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

36
aparna vinod

வங்கியில் கடன் பெற்றவர்களிடமிருந்து திருப்பி வாங்கும் முகவர்கள் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூல் ரீதியில் சிறப்பாக சாதனை படைத்திருந்தது பைரவா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத். இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...D Imman : கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் ..குவியும் வாழ்த்துக்கள்

46
aparna vinod

கோழிக்கோட்டை சேர்ந்த ரினில் ராஜ் என்பவர் உடன் இவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்தான புகைப்படங்களை பதிவிட்டுள்ள அபர்ணா "உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது என எழுதியுள்ளார். 

56
aparna vinod

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெறுவதாக தெரிகிறது. இதன் முதல் கட்டமாக நடைபெற்ற பிரம்மாண்ட நிச்சயதார்த்தம் குறித்தான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

66
aparna vinod

இவர் மலையாளத்தில் 'நான் நின்னோடு கூடேயுண்டு' என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதை தொடர்ந்து கோகினூர் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதன் பிறகு தமிழில் பைரவா படத்தில் துணை நடிகையாக தோன்றி இங்கு அறிமுகமானார். பைரவாவிற்கு பிறகு நடுவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.

click me!

Recommended Stories