தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்ற படங்கள் மிகவும் பிரபலம்.
35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவருக்கு, திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் பல்வேறு வரன்களை பார்த்தும், இதுவரை இவருக்கு திருமணம் நடக்க வில்லை.
சமீபத்தில் கூட அனுஷ்கா தன்னை விட, வயது குறைந்த விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தாக தகவல் பரவியது.
ஏற்கனவே இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்து சென்றதால்.. இதுவும் அப்படி பட்ட ஒரு தகவலாகவே பார்க்கப்பட்டது.
கடைசியாக இவரது வித்தியாசமான நடிப்பில் உருவான 'நிசப்தம்' திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்தப்படத்தை அடுத்து கொரோனா தொற்று பரவ துவங்கியதால், ஆந்திராவிற்கு சென்று தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார் அனுஷ்கா. மற்றொரு புறம் இடைவிடாமல் இவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியும் நடந்து வருகிறது.
திரைப்படங்களில் நடிப்பதற்காக, 'ஸிரோ சைஸ்' படத்திற்காக போட்ட எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, ஸ்லிம் லுக்கிற்கு மாறிய நிலையில், தற்போது மீண்டும் குண்டாகியுள்ளார்.
இவரது மிகவும் ஸ்டைலிஷாக... சும்மா அமுல் பேபி போல் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இவரது ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது. அந்த புகைப்பாம் இதோ