மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலமாக இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை அனுபவமா பரமேஸ்வரன்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரேமம் திரைப்படம். பள்ளி காலத்தில் நிவின் பாலி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படம் மலையாளத்தை விட தமிழில் வெற்றி பெற்றதால், அனுபமாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இங்கேயும் உருவானது.
அதையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
அண்மையில் இவர் நடித்து வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அனுபவமா பரமேஸ்வரன் தற்போது இந்தியிலும் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கருப்பு சேலையில் யூத்துகளை ஜொள்ளு விட வைக்கும் வகையில் லேட்டஸ்ட் போட்டோசூட் நடத்தி உள்ளார். அனுபவமா பரமேஸ்வரனின் இந்த சூப்பரான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.