தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
காதல் கிசுகிசு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக, சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஆன்ட்ரியா தற்போது விஜய் , விஜய் சேதுபதி ஆகியோர் முதன் முறையாக ஒன்றிணையும் “மாஸ்டர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மிஷ்கின். பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ளார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.
தற்போது, ஷூட்டிங் அனைத்துக்கும் ரெஸ்ட் விட்டு விட்டு... எகிப்துக்கு சுற்றுலா பிறந்துள்ளார். அங்கு பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்று, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு, செம்ம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...