Actress Andrea speech : ''வேலைக்காக படுக்கையை பகிர மாட்டேனு தைரியமா சொல்லுங்க’’ - நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

Ganesh A   | Asianet News
Published : Feb 15, 2022, 01:09 PM IST

திறமையையும், கடின உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்ததாகவும், இன்றளவும் தான் casting couch-ஐ சந்தித்ததில்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா கூறி உள்ளார்.

PREV
16
Actress Andrea speech : ''வேலைக்காக படுக்கையை பகிர மாட்டேனு தைரியமா சொல்லுங்க’’ - நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ஆண்ட்ரியா. நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 

26

தற்போது இவர் கைவசம் மிஸ்கினின் பிசாசு 2 படம் உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் பேண்டஸி படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

36

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, சில வருடங்களுக்கு முன்பு Me Too விவகாரம் குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதில் அவர் கூறியதாவது: “மீடூ இயக்கம் ஹாலிவுட்டில் இருந்துதான் தொடங்கியது. புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹார்வே வெயின்ஸ்டன் மீது பல நடிகைகளும், மாடல் அழகிகளும் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார்கள். அதுவே எவ்வளவு பெரிய முன்னேற்றம். ஒரு மிகப்பெரிய ஆளின் பிம்பத்தை வெளியில் கொண்டுவந்தது மீடூ தான். 

46

இதுவே கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் செஞ்சிருக்க முடியுமா. இப்போ உலகம் வேற மாதிரியாக மாறி இருக்கிறது. இப்போதெல்லாம் பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க உலகம் தயாராகிவிட்டது. “ஏய் சும்மா இருடி“ அப்படின்னு யாரும் இப்போ சொல்ல முடியாது. பழைய கதையை ஏன் இப்போ பேசுறீங்கன்னு கேக்குறாங்க. எப்போ செஞ்சாலும் தப்பு தப்புதான்.  மீடூ இயக்கம் போன்றவற்றால் இன்றைய இளம் தலைமுறையினர் எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வார்கள்.

56

எனக்கு ஒரு ஆணை பிடிச்சுருக்கு. அவருக்கும் என்னை பிடிச்சுருக்கு நாங்க டேட்டிங் செய்ய போறோம் அப்படினா அது வேற. நான் என்னை மிகவும் மதிக்கிறேன். என்னுடைய தரம் எனக்கு தெரியும். அதேபோல் என் திறமையும் எனக்கு தெரியும், நான் வேலைக்காக ஒருபோதும் படுக்கையை பகிர மாட்டேன் என ஒரு பெண் துணிந்து சொன்னால் casting couch என்பது இல்லாமலே போயிடும். 

66

தன்னம்பிக்கை இருக்கனும், அதை விட்டுட்டு அவங்கள காம்ப்ரமைஸ் செய்ய விரும்பினால், ஆண்களும் மனுஷங்கதான், அவர்களும் ஆசைப்படுவார்கள். நான் எந்த ஒரு பெரிய திரைப்பட குடும்பத்தில் இருந்தும் வரவில்லை. எனக்கு மிகப்பெரிய இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ தெரியாது. நான் என்னுடைய திறமையையும் கடின உழைப்பையும் மட்டுமே நம்பி வந்தேன். இதுவரை பல படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் இன்றளவும் casting couch-ஐ நான் சந்தித்தே இல்லை” என மனம் திறந்து பேசி உள்ளார் ஆண்ட்ரியா.

Read more Photos on
click me!

Recommended Stories