AK 61 Update :தல 61 படத்துக்காக அண்ணா சாலையில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்... ஷூட்டிங் எப்போ தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Feb 15, 2022, 12:28 PM IST

வித்தியாசமான கதையம்சத்தில் தயாராகும் AK 61 படத்தில் நடிகர் அஜித், இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று மங்காத்தா பாணியில் வில்லன் வேடம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
17
AK 61 Update :தல 61 படத்துக்காக அண்ணா சாலையில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்... ஷூட்டிங் எப்போ தெரியுமா?

இயக்குனர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் எச்.வினோத். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 

27

வித்தியாசமான கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார். 

37

இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத். 

47

இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித், தனது அடுத்த படமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், வருகிற பிப்ரவரி 24-ந் தேதி ரிலீசாக உள்ளது.

57

அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

67

வித்தியாசமான கதையம்சத்தில் தயாராகும் இப்படத்தில் நடிகர் அஜித், இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று மங்காத்தா பாணியில் வில்லன் வேடம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

77

தல 61 படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 9-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு போன்று பிரம்மாண்டமாக செட் போட்டுள்ளனர். அங்கு தான் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இதன்மூலம் சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு குறித்து தான் இந்த படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories