ஹாட் குயினாக மாறிய அதிதி ஷங்கர்! செம பிட் உடையில் விழி பிதுங்கி நிற்கும் அழகு.. வேறலெவல் ஹாட் போட்டோஸ்

First Published | Jan 28, 2022, 5:28 AM IST

ஷங்கரின் மகள் அதிதி (Aditi Shankar), ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்தவாறு விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் விருமன். இப்படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கி உள்ளார். 

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். 

Tap to resize

இப்படத்தில், மதுரை பெண்ணாக நடித்துள்ளார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் 'விருமன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை அதிதி கவர்ந்து விட்டதால் படம் வெளியாவதற்கு முன்பே இவருக்கான ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது.

இதையடுத்து கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் (Aditi Shankar) ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அதிதி.

முதல் படத்தில் பாவடை தாவணியில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தாலும், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக இவரின் சமீபத்திய போட்டோஷூட்டுகள் அமைந்துள்ளன.

அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்தவாறு விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

Latest Videos

click me!