என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?... கண்ணழகி மீனாவின் லேட்டஸ்ட் போட்டோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

First Published Oct 1, 2020, 7:14 PM IST

விமானப் பயணத்தின்போது கரோனா அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிஇ உடைகள் அணிந்துள்ளார் மீனா.  

1984ம் ஆண்டு வெளியான அன்புள்ள ரஜினிகாந்த், திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியாக நடித்து அசத்தியிருப்பார் நடிகை மீனா. அந்த பாடல் காட்சியில் தேவதை உடையணிந்த பேபி மீனா சிரிக்கும் காட்சிகள் நம் நினைவுக்கு வரும்.
undefined
அதன் பின்னர் அதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக எஜமான் படத்திலும் நடித்த மீனாவிற்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.
undefined
அதன் பின்னர் ரஜினி, கமல், கார்த்திக், முரளி, பார்த்திபன், அஜித், விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி போட்ட மீனா. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டு சற்று விலகி இருந்தார்.
undefined
தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்த மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். 24 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் உடன் மீனா மீண்டும் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
undefined
அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லால் உடனும் திரிஷ்யம் படத்தின் பார்ட் 2-வில் நடித்து வருகிறார். திரிஷ்யம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது பாகத்திலும் அவரே நடிக்கிறார்.
undefined
இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணித்துள்ளார். விமானப் பயணத்தின்போது கரோனா அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிஇ உடைகள் அணிந்துள்ளார் மீனா.
undefined
அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மீனா, பார்க்க விண்வெளிக்கு செல்வது போல் இருந்தாலும், நான் போருக்குச் செல்வது போல் உணர்கிறேன். 7 மாதங்களுக்குப் பிறகு பயணம். விமான நிலையம் அமைதியாக, ஆள் நடமாட்டமின்றி பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
undefined
பலரும் என்னைப் போல உடையணியாமல் இருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகவும் வசதியற்ற ஆடை என்று சொல்வேன். குளிர்ந்த வானிலையும், ஏசியும் இருந்தபோதும் மிகவும் வெப்பமாகவும், இறுக்கமாகவும், வியர்வையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இந்த ஆடை உள்ளது. முகத்தைக் கூட துடைக்க முடியவில்லை.
undefined
இரவு பகலும் நமக்காக இதைப் போல் உடையணித்த சுகாதாரப்பணியாளர்களுக்கு தலை வணங்குகிறேன் அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு அதிகமாகி விட்டது. மனித இனத்துக்கும் நீங்கள் செய்து வரும் தன்னலமற்ற சேவைக்கு நன்றி என கூறியுளார்.
undefined
click me!