தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி நடிகராக வந்து ஜோக் சொல்லி சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்று இல்லாமல் தனது கருத்தால் பலரையும் சிந்திக்க வைக்க கூடியவர்.
தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுகிறார். இதுவரை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை 3 முறை பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இப்படி திரைத்துறையை தாண்டி சமூக சேவையிலும் தனது அக்கறையை செலுத்தி வரும் நடிகர் விவேக், சத்தமே இல்லாமல் புத்தம் புது லுக்கில் அசத்தலான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் விவேக் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முற்றிலும் வெள்ளை நிற பேக்ரவுண்டில் கண்ணில் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்து செம்ம கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார்.
லாக்டவுன் நேரத்தில் நடிகர்கள் மனோபாலா, மன்சூர் அலிகான், நாசர் ஆகியோரைத் தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட லுக்கில் அசத்தியிருக்கிறார் விவேக்.
சின்ன கலைவாணரின் இந்த எங் லுக்கை பார்த்து கோலிவுட்டே வாய்பிளக்கிறது.
விவேக்கின் இந்த அசத்தலான போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் லைட்டா நரைச்சிருந்தாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை என பாராட்டி வருகின்றனர்.