என்னது நடிகர் விஷால் அப்பாவா இது?... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....!

First Published | Sep 16, 2020, 1:00 PM IST

பிரபல நடிகர் விஷாலின் அப்பாவான ஜி.கே.ரெட்டியின் ஃபிட்னஸ் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக இவர் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை.
தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷாலுக்கும் அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதிலிருந்து குணமடைந்ததாக அவரே வீடியோ வெளியிட்டிருந்தார்.
Tap to resize

விஷால் உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. லாக்டவுனில் ஜிம்களை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவு போட்ட முதல் நாளே நண்பன் ஆர்யாவுடன் முதல் ஆளாக போய் நின்றவர்.
அப்படி உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கும் பழக்கம் விஷாலுக்கு அவருடைய அப்பா மூலமாக தான் வந்திருக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளரான ஜி.கே.ரெட்டி கன்னடத்தின் வெளியான ராக்‌ஷஸி என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் ரீமேக். அதில் ராதாரவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் நேத்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார். பட தயாரிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.
விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டிக்கு தற்போது 82 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் விடாது உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ளார்.
விஷாலுக்கே டஃப் கொடுக்கும் விதமாக அவருடைய அப்பாவின் ஃபிட்னஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதை பார்க்கும் விஷால் ரசிகர்கள் இது அவருடைய அப்பா தானா? என ஆச்சர்யத்துடன் வியக்கின்றனர்.
இந்த வயசிலும் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஜி.கே.ரெட்டி, தனது யூ-டியூப் சேனல் மூலமாக ஃபிட்னஸ் சேலஞ்சையும் விடுத்து கலக்கி வருகிறார்.
ஃபிட்னஸில் தெறிக்கவிடும் விஷால் அப்பா ஜி.கே.ரெட்டி
இவருக்கு 82 வயசுன்னு சொன்னால் நம்புவீங்களா?
விஷாலுக்கே செம்ம சேலஞ்ச் இவர் தான் போலயே?

Latest Videos

click me!