கொரோனா குணமான ஜோரில் விஷால் செய்த காரியம்... “உயிர் நண்பர்” ஆர்யாவை கழுவி ஊத்தும் ரசிகர்கள்...!

First Published | Aug 11, 2020, 6:47 PM IST

சமீபத்தில் கொரோனாவில் இருந்து தந்தையுடன் மீண்ட நடிகர் விஷால் செய்த காரியத்திற்காக அவருடைய நண்பரான ஆர்யாவை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, விஷால் இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி.
பிட்னஸ் மீது கொள்ளை ஆர்வம் கொண்ட ஆர்யா சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது என கடுமையான ஒர்கவுட்களை செய்கிறார்.
Tap to resize

ஆர்யாவின் சைக்கிள் ஓட்டும் பழக்கைத்தை அவருடைய நண்பர்களான விஷால், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் பின்பற்றுகின்றனர். தற்போது லாக்டவுன் காரணமாக ஜிம் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் நடிகர்கள் தங்களது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வந்தனர்.
தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. உடனேயே நடிகர் ஆர்யா அங்கு சென்று உடற்பயிற்சி செய்துள்ளார்.
ஆர்யா மட்டும் போய் இருந்தால் பிரச்சனை இல்லை கூடவே விஷாலையும் அழைத்துச் சென்றுள்ளது, அவருடைய ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஷாலும், அவருடைய அப்பாவான ஜி.கே.ரெட்டியும் குணமடைந்தனர்.
கொரோனாவில் இருந்து மீண்ட சிறிது நாட்களிலேயே ஆர்யாவுடன் சேர்ந்து ஜிம்மிற்கு போனார் என கோவத்தில் உள்ளனர்.
இப்போ தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்தீர்கள். அதற்குள் ஒர்க்அவுட் செய்ய ஜிம்முக்கு செல்லலாமா. ஆர்யா கூப்பிட்டால் உடனே போய்விடுவதா. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் உடல் வலி தாங்க முடியவில்லை என்று அக்கறையுடன் நலம் விசாரித்தும், ஆர்யாவை திட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

Latest Videos

click me!