Thalapathy 66 :சென்னைல தான் ஷூட்டிங் நடத்தனும்.. ‘தளபதி 66’ படக்குழுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்- பின்னணி என்ன?

Published : Apr 19, 2022, 12:46 PM IST

Thalapathy 66 : தளபதி 66 படத்தில் சிறிய மாற்றம் செய்யச் சொன்ன நடிகர் விஜய், இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடத்துமாறு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடன் அறிவுறுத்தினாராம்.

PREV
14
Thalapathy 66 :சென்னைல தான் ஷூட்டிங் நடத்தனும்.. ‘தளபதி 66’ படக்குழுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்- பின்னணி என்ன?

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படம், கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

24

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட ஷூட்டிங்கை ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருந்ததாம். ஆனால் இதில் சிறிய மாற்றம் செய்யச் சொன்ன நடிகர் விஜய், இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடத்துமாறு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடன் அறிவுறுத்தினாராம்.

34

அதற்கு காரணம் என்னவென்றால், சென்னையில் ஷூட்டிங் நடைபெற்றால் அதன்மூலம் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு விஜய் இந்த மாற்றத்தை செய்யச் சொன்னாராம். அதற்கு தளபதி 66 படக்குழுவும் ஓகே சொல்லிவிட்டதாம். விஜய்யின் இந்த செயலுக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

44

இதையடுத்து சென்னையில் தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதன்மூலம் 200 பெப்சி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு பெப்சி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Udhayanidhi Stalin : பீஸ்ட் திரைப்படம் ஹிட்டா? ஃபிளாப்பா? - பதிலளித்த உதயநிதி..!

Read more Photos on
click me!

Recommended Stories