வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் பேசி முடித்ததை அடுத்து நடிகர் விஜய் இறுதியாக மேடை ஏறி பேசினார். அவர் பேச வந்ததும் ரசிகர்களை பார்த்து ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இறுதியாக நான் ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்க ஒரு ஸ்டைல் கிடைத்துவிட்டதாக தெரிவித்தார்
நான் 1990-ல் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக வந்தார். பின்னர் போகப்போக அவர் என்னுடைய சீரியஸ் ஆன போட்டியாளராக மாறினார். இதையடுத்து நானும் தொடர்ந்து கஷ்டப்பட்டு ஓடினேன். அந்த நடிகரை விட எப்படியாவது அதிக வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக போராடினேன். நம்ம எல்லாருக்கும் அப்படிப்பட்ட போட்டியாளர் வேண்டும். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். நீங்கள் உங்களுடன் போட்டி போடுங்கள் என்று தெரிவித்தார்.