தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது. இந்த படம், தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்கள் என இரண்டு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
'மாஸ்டர்' படம் வெளியான இரண்டு வாரங்களிலேயே சுமார் 200 கோடி வசூல் சாதனை படைத்தது. அதே போல், 50 சதவீத பார்வையாளர்கள் மத்தியில் படம் ரிலீஸ் ஆனபோதிலும், வசூலில் வாரி குவித்தது.
இதை தொடர்ந்து தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் தற்போது 'தளபதி 65 ' ஆவது படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையேடு அன்று இரவே விமானத்தில் ஜார்ஜியா பறந்தார்.
15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜிவாவில் நடந்த நிலையில், படக்குழுவினர் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திரும்பினர்.
கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சில நாட்கள் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.
மேலும் 65 ஆவது படப்பிடிப்பு முடிவடையும் முன்னரே... தளபதியின் 66 ஆவது படம் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கி விட்டது.
இந்த நிலையில் விஜய் குறித்த சுவாரஸ்ய தகல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், தளபதி பள்ளிப் பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த முகைப்படத்தில் மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்த்திருக்கிறார் விஜய். இந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறார்கள்.