வடிவேலு கண்ணீருக்கு கிடைத்த விடிவுகாலம்! யோசிச்சிருக்க கூட மாட்டீங்க வைகை புயல் படத்திற்கு வேற லெவல் டைட்டில்!

First Published | Mar 29, 2021, 1:03 PM IST

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசிக்கப்பட்டு கொண்டிருக்கும், வைகைப் புயல் வடிவேலு விரைவில் நடிக்க உள்ள படம் குறித்தும், அந்த படத்தின் டைட்டில் குறித்தும் இயக்குனர் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் வைகை புயல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
 

1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? எனும் ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.
Tap to resize

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலு சமீபத்தில், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். இதிலே இவர் தான் நடிக்க ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்றது, 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படக்குழு.
இவரை பற்றிய சர்ச்சைகள் நீண்டு கொண்டே இருக்க, சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டு பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் வடிவேலு.
உடல் மெலிந்து காணப்பட்ட இவர், 'கர்ணன்' படத்தில் இருக்கும் 'சேராத இடம் சேர்த்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா' என கனத்த குரலில் பாடி, சோகத்தை வெளிப்படுத்தியதோடு கண் கலங்கி அழுதார். மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடம் தானே லாக் டவுனில் இருக்கிறீர்கள் நான் 10 வருடமாக லாக் டவுனில் இருக்கிறேன் வீட்டிலேயே முடங்கி கிடப்பது எவ்வளவு ரணம் தெரியுமா என உருக்கமாக பேசினார்.
இதைத்தொடர்ந்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என அவருக்கு ஆதரவு குரல்கள் கூடியது. இதை தொடர்ந்து, இவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க உள்ள ஒரு படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அடுத்ததாக இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்க புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு தலைநகரம் படத்தில் வைகை புயல் ஏற்று நடித்த, நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே இது காமெடி திரைப்படம் என்பது தெரிகிறது.
வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் போட்டுள்ள தடையை நீக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இயக்குனர் சுராஜ்... தன்னுடைய இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள படம் குறித்த தகவலை வெளியே கசியவிட்டுள்ளார்.
மேலும் இந்த படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!