Udhayanidhi New Movie: வேற லெவல்.. போலீஸ் கெட்டப்பில் கெத்து காட்டும் உதயநிதி! 'நெஞ்சுக்கு நீதி' பட போட்டோஸ்!

Published : Dec 17, 2021, 01:43 PM ISTUpdated : Dec 17, 2021, 06:26 PM IST

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi stalin) தற்போது இயக்குனர் அருண் ராஜ் காமராஜ் இஇயக்கத்தில் நடித்து வரும் படமான 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
18
Udhayanidhi New Movie: வேற லெவல்.. போலீஸ் கெட்டப்பில் கெத்து காட்டும் உதயநிதி! 'நெஞ்சுக்கு நீதி' பட போட்டோஸ்!

உதயநிதி ஸ்டாலின் தற்போது, அரசியலில் ஆர்வம் காட்டி வந்தாலும்... மறுபுறம் சிறந்த கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

28

அந்த வகையில் தற்போது முதல் படமான 'கனா' படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

 

38

நெஞ்சுக்கு நீதி என்கிற பெயரில் உருவாகி வரும் இவரது, இரண்டாவது படைப்பாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

48

உதயநிதி இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்.

 

58

முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

68

திபு நினன் தாமஸ், இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

78

 Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது. வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

88

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒர்கிங் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

Read more Photos on
click me!

Recommended Stories