கிராமத்து வேடத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandhanna) இறங்கி நடித்துள்ள, 'புஷ்பா' திரைப்படத்திற்கு (Pushpa Movie) பலர் பாசிட்டிவ் விமர்சனங்கள் அளித்து வந்தாலும், சில ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் குறித்த தொகுப்பு இதோ...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, இன்று ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில், இந்த படத்தின் முதல் பாகம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார்.
210
'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுனின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
310
ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் செம்மரத்தின் தேவையை காட்டும் காட்சிகளுடன் இப்படம் துவங்குகிறது. ‘புஷ்பராஜ்’ என்ற முக்கிய வேடத்தில் அல்லு அர்ஜுன், சேஷாசலம் காடுகளில் இருந்து செம்மரத்தை கடத்தும் டிரக் டிரைவராக நடித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
410
அல்லு அர்ஜுன் தனது சித்தூர் பேச்சுவழக்கில் கச்சிதமாக இப்படத்தில் வசனங்களை உச்சரித்து இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார். அல்லு அர்ஜுனை சித்தூர் லோக்கல் ஆள் போல் கச்சிதமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் சுகுமார், இந்த புஷ்பா கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார்.
510
அதே நேரத்தில் கிராமிய தோற்றத்துடன் திரையில் தோன்றும் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் குறித்த காட்சி, முதல் பாதியின் தொடக்கத்தில் சற்று நீளமாக உள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
610
செம்மர கடத்தல் கதை மற்றும் அல்லு அர்ஜுனின் நடிப்பு போன்றவை இதுவரை திரையில் பார்க்காத ஒன்று என்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே போல் இயக்குனர் சுகுமார் இப்படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களான சுனில், அனசுயா, ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரின் கதாபாத்திரங்களும் தனித்துவம் பெற்றுள்ளது.
710
முதல் பாதி மிகுந்த விறுவிறுப்புடன் இருந்தாலும், இடைவேளைக்குப் பிந்தைய பகுதியில், அதாவது இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வேகம் குறைந்து, மங்கியது போல் தெரிவதாகவும் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
810
பாடல்களில் உணரப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத் இசையை, படத்தின் பின்னணி உணர முடியவில்லை என கூறி வருகிறார்கள். முக்கிய காட்சிகளில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் எடுபட த் தவறியதாகத் கூறப்படுகிறது.
910
மொத்தத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சிறப்பம்சம் என்றால் அல்லு அர்ஜுனின் நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி, படத்தின் கதை, சமந்தா ரூத் பிரபுவின் சிறப்பு நடனம் ஆகியவை இந்தப் படத்தின் சிறப்பம்சங்கள்.
1010
கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் வலுவாக இருக்கும். மொத்தத்தில், புஷ்பா: தி ரைஸ் மூலம் சுகுமார் இரண்டாம் பாகத்திற்கு நல்ல களம் அமைத்துள்ளார்.